வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் சாவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் உடல்நல குறைவால் உயிரிழந்தது.

Update: 2022-07-05 07:04 GMT

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த 'புவனா என்ற விஜி' என்கிற 25 வயது உடைய பெண் சிங்கம் உடல்நல குறைவால் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தது.

சிங்கம் குணமடையாத காரணத்தினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிங்கத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பெண் சிங்கம் நேற்று இரவு உயிரிழந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மணி என்ற 32 வயதுடைய ஆண் சிங்கம் உடல்நல குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நீலா என்ற பெண் சிங்கமும், பத்மநாபன் என்ற ஆண் சிங்கமும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. அதே ஆண்டில் கவிதா என்ற பெண் சிங்கமும் உடல்நிலை குறைவால் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்