ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி

திருவாடானை தாலுகாவில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-20 17:21 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் மேம்படுத்திடும் வகையில் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், திருவாடானை தாலுகாவில் இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருவாடானை தாலுகாவில் உள்ள வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கு ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அலுவலக வேலை நாட்களில் நேரில் கொண்டு வந்து தாலுகா அலுவலக தேர்தல் பிரிவு, இ-சேவை மையம் மூலமாகவும், Voters Help Line என்ற செயலி அல்லது https://www.nvsp.in என்ற இணையதள முகவரி மூலமாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம்-6பி ஐ பூர்த்தி செய்து கொடுத்தும் வாக்காளர்கள் தங்களின் ஆதார் விவரங்களை இணைத்து கொண்டு பயனடைய வேண்டும் என்றும் தாசில்தார் செந்தில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்