லிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

லிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-09 19:57 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வலையங்குளத்தில் பழமை வாய்ந்த தானா முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறி வருவதையொட்டி நேர்த்தி கடனாக நாடகங்கள் நடத்தி வருகிறார்கள். இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 50 நாட்களுக்கு மேல் தொடர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருவது இந்த கோவிலின் தனி சிறப்பாகும். இந்த கோவிலில திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி புனிதநீர் கொண்டு வரப்பட்டு இருந்து மேளதாளங்கள் முழங்க குடம் புறப்பாடு நடந்தது. பிறகு வேத மந்திரங்கள் முழங்க ராஜ கோபுரத்தில் 3 கலசங்கள், கோவிலின் விமானத்தின் கலசம் மற்றும் தோரணவாயிலின் 3 கலசங்களுக்கு சமகாலத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடந்து லிங்க பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது. அங்கு வலையங்குளம், எலியார்பத்தி, சோளங்குருணி கூடக்கோவில், நெடுமதுரை, ஆலங்குளம், கொம்பாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்