உடலில் மண்எண்ணெய் ஊற்றியபடி போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண்
உடலில் மண்எண்ணெய் ஊற்றியபடி போலீஸ் நிலையம் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையை அடுத்த படமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது 35). இவருடைய வீட்டின் அருகி்ல் வசிக்கும் முத்தையா (50) என்பவருக்கும், சங்கீதாவுக்கும் முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் முத்தையா சங்கீதாவுடன் தகராறு செய்தாராம். இதனால் மனம் உடைந்த சங்கீதா உடலில் மண்எண்ணெயை ஊற்றி கொண்டு சிவகங்கை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.