பலத்த காற்றுடன் சாரல் மழை

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2023-07-04 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாரல் மழை

திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியது. மதியம் முதல் மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது. மதியம் 3.30 மணிக்கு மேல் திடீரென்று பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.

இந்த காற்றால் சாலையோரங்களில் உள்ள மரங்களில் காய்ந்த மரக்கிளைகள் முறிந்து கீழே விழுந்தன. திருவாரூர் தெற்கு வீதியில் சுழல் காற்று போல் வீசியது.இதனால் சாலையோரங்களில் இருந்த குப்பைகள் காற்றில் பறந்து சென்று வாகனஒட்டிகள் மற்றும் நடந்து சென்றவா்கள் மீது விழுந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

மேலும் நேற்று காற்று வீசும் போது திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே மின்கம்பி அருகில் இருந்த மரக்கிளையில் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு புகை வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் இந்த வழியாக அச்சத்துடன் சென்றனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடி பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகளும்,பாதசாரிகளும் நனைந்து கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்