சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்ற வாலிபர் கைது

வடமாநில இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.;

Update: 2023-04-07 20:03 GMT

திருவிடைமருதூர்;

வடமாநில இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

சுயநினைவின்றி கிடந்தார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செண்பகமுத்து(வயது27). சம்பவத்தன்று இவர் பொதிகை நகர் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் தாக்கப்பட்டு கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று செண்பகமுத்துவிடம் விசாரணை நடத்தினர்.

மது அருந்தியபோது தகராறு

விசாரணையில், கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்தகுமார்(30), அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ்(28) ஆகியோருடன் சேர்ந்து செண்பகமுத்து மது அருந்தி உள்ளார்.அப்போது ஏற்பட்ட தகராறில் வசந்தகுமார், தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து செண்பகமுத்துவை பாட்டில் மற்றும் செங்கல்லால் தாக்கியது தெரிய வந்தது.

சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்றவர்கள்

இதில் வசந்தகுமார், தினேஷ் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கி பணிக்காக கும்பகோணத்துக்கு வந்த வடமாநில இளம்பெண்ணிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.இவர்கள் தங்கள் தண்டனையை ரத்து செய்யக்கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் வசந்தகுமார், தினேஷ் ஆகிய இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

கைது

இவர்களின் ேமல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு வசந்தகுமார், தினேஷ் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வசந்தகுமாா், தினேஷ் ஆகிய இருவரும் தலைமறைவானாா்கள். இந்த நிலையில் செண்பகமுத்து மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய திருவிைடமருதூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வசந்தகுமாரை கைது செய்தனர். தலைமறைவான தினேசை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்