திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி இறந்தார்.

Update: 2023-06-30 18:57 GMT

அரியலூர் மாவட்டம் கண்டிராதீர்த்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் சந்துரு (வயது 33). இவர் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய சிறையில் சந்துரு மயங்கி விழுந்தார். இதைகண்ட சிறைகாவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்