ஆயுள் தண்டனை பெண் கைதி சாவு

வேலூரில் ஆயுள் தண்டனை பெண் கைதி இறந்தார்.

Update: 2023-05-19 12:10 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 77). இவர் சொத்து கேட்டு தகராறு செய்த மகனை கொலை செய்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு ராசிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு கோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்தது. அதையடுத்து அவர் வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார். லட்சுமிக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைபாடு இருந்தது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் லட்சுமிக்கு கடந்த மாதம் 28-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்