எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் யூனிட் உயிர்காக்கும் மருந்துகள் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வழங்கியது

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் யூனிட் உயிர்காக்கும் மருந்துகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வழங்கியது.

Update: 2022-09-13 17:55 GMT

நெய்வேலி, 

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேரின் சிகிச்சைக்காக உயிர்காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கவேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை அனுகி மருந்துகளை வாங்கி தரும்படி கோரிக்கை வைத்தது. அதன்அடிப்படையில் என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் உத்தரவின்பேரில் என்.எல்.சி. நிர்வாகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் யூனிட் உயிர் காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்தது. இதையடுத்து நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் பொது கண்காணிப்பாளர் டாக்டர் தாரிணி மவுலி கலந்து கொண்டு என்.எல்.சி. மூலம் வாங்கப்பட்ட உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சுவாமிநாதனிடம் வழங்கினார். அப்போது மருத்துவமனை நிர்வாக அதிகாரி சோமர்வேல் உடனிருந்தார். என்.எல்.சி. நிறுவனம் போஷாக் என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் சங்கம் மூலம் கடலூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சத்துணவு வழங்கி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்