மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Update: 2023-02-20 16:31 GMT


குண்டடம் அருகே மனைவியை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

மனைவி கொலை

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே வேங்கிப்பாளையத்தை அடுத்த மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி துளசிமணி (42). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டைபோட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 20-1-2019 அன்று இரவு 11.45 மணி அளவில் வீட்டின் வெளியே படுத்திருந்த துளசிமணியை செந்தில்குமார் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். சத்தம் கேட்டு குழந்தைகள் ஓடி வந்ததும் செந்தில்குமார் அங்கிருந்து தப்பினார். இதில் சம்பவ இடத்திலேயே துளசிமணி இறந்தாமனைவியை கொலை செய்த

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து குண்டடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் செந்தில்குமாருக்கு, மனைவியை துன்புறுத்திய பிரிவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும், இதை ஏக காலத்தில் அனுபவிக்கும்படி நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து கோர்ட்டில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றம் நிரூபிக்க திறம்பட செயல்பட்ட குண்டடம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.

மேலும் செய்திகள்