பெட்ரோல் நிலைய ஊழியர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

பெட்ரோல் நிலைய ஊழியரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-07-01 09:33 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சக்திவேல் (வயது 24). இவர் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், முத்தமிழ் நகர், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மனோகர் (65). இவர்கள் இருவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தனர்.

அப்போது சக்திவேலுக்கும் மனோகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபோல கடந்த 31-10-2011 அன்று மதியம் 2 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்திவேல் மீது செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனார். இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி காயத்ரி சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் வக்கீல் கே.வையாபுரி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்