கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Update: 2023-08-04 17:37 GMT

திருப்பூர்

பல்லடத்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

மகளுக்கு பாலியல் தொந்தரவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அவரப்பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது தொழிலாளி. தனது மனைவி, மகளுடன் குடியிருந்தார். அந்த பெண்ணும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் வீட்டில் தனியாக அவரது 12 வயது மகள் இருந்துள்ளாள்.

இந்த நிலையில் கடந்த கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதை தாயாரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக தனது மகளை மிரட்டி அந்த தொழிலாளி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஆயுள் தண்டனை

ஒரு கட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாத சிறுமி தனது தாயாரிடம் விவரத்தை கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் பல்லடம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போக்சோ பிரிவின் கீழ் தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மகளுக்கு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

---

Tags:    

மேலும் செய்திகள்