கணவர், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை

ராமேசுவரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-05-31 18:41 GMT

ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

கழுத்தை நெரித்து கொலை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் காந்திநகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் சாந்தகுமார்(வயது 32). ஆசாரி தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி அறந்தாங்கி சிலத்தூர் பகுதியை சேர்ந்த சாந்தி (27). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி சாந்தகுமாரின் தங்கை வனிதா(32) என்பவர் திருப்பாலைக்குடி பழங்கோட்டையில் கணவன் வீட்டில் இருந்து தாய் வீடான ராமேசுவரம் சென்றுள்ளார்.

அங்கு சாந்தி மற்றும் சாந்தகுமார் குடும்பத்தினர் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தாய் மலையரசி (49), தங்கை வனிதா ஆகியோர் பிடித்து கொள்ள சாந்தகுமார் மனைவி சாந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்தாராம்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து சாந்தியின் அண்ணன் சங்கர்(37) அளித்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.சுபத்ரா மனைவியை கொலை செய்த சாந்தகுமார், அவரின் தாய் மலையரசி, தங்கை வனிதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்