2 பேருக்கு ஆயுள் தண்டனை

வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-09-06 20:01 GMT

திருச்சுழி போலீஸ்சரகம் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 28), திருமலை (23). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரையும் சொக்கம்பட்டியை சேர்ந்த பசுபதி (23) என்பவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஆதலால் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 29-8-2018-ந் தேதியன்று நாகராஜனும், திருமலையும் சேர்ந்து பசுபதியை கட்டையால் அடித்து படுகொலை செய்தனர்.இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜன் மற்றும் திருமலையை கைது செய்தனர். இந்த வழக்கை விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்தகுமார் விசாரித்தார்.இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நாகராஜன் மற்றும் திருமலைக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்