போலி ஆவணம் மூலம் பதிவு செய்த 5 பத்திர எழுத்தர்களின் உரிமம் ரத்து

போலி ஆவணம் மூலம் பதிவு செய்த 5 பத்திர எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

Update: 2022-12-22 18:19 GMT

திருப்பத்தூர் மாவட்ட பத்திரபதிவுத்துறை அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் போலியான ஆவனங்களை பத்திரபதிவு செய்து வருவதை தடுக்க தணிக்கை குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. இந்த குழு நடத்திய ஆய்வில் போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. நாட்டறம்பள்ளி சார் பதிவாளர் அலுவலத்தில் பத்திர எழுத்தர்கள் ராமு, சதானந்தன், திருப்பத்தூர் சார்பதிவாளர் பகுதி ஒன்றில் பத்திர எழுத்தர்கள் சங்கர், கோபால், ரவிச்சந்திரன் ஆகிய பத்திர எழுத்தர்கள் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் 5 பேரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2 பத்திர எழுத்தர்கள் பதிவு செய்த பத்திரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுபோன்ற உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் தவறு செய்தால் அவர்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்