எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. கிளை முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமக்குடி,
பரமக்குடி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. கிளை முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பரமக்குடி கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் முகமது ஷாஜகான், செயலாளர் திருநாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச்செயலாளர் காளிமுத்து வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு போனஸ் அதிகப்படுத்த வேண்டும். முகவர்கள் வணிகம் செய்யும் வயது வரை குழு காப்பீடு வழங்க வேண்டும். முகவர்களுக்கு பணிக்கொடை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். மத்திய அரசு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி.வரியை நீக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் செல்லக்காரி, குருசாமி, தமயந்தி, முக்கூரான், முத்துக்கருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.