எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்தக்கோரி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-30 20:00 GMT

அகில இந்திய முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சேலம் வடக்கு எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டுக்குழு தலைவர் அன்புவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன், பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் எல்.ஐ.சி. முகவர்களுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண்டும். குழு காப்பீட்டு வயது மற்றும் தொகையை உயர்த்த வேண்டும். நேரடி முகவர்களுக்கு கூடுதல் பணப்பயன்கள் வழங்க வேண்டும். முகவர் நல நிதி அமைக்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு, பாலிசுக்கான போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை ரசீது வழங்க வேண்டும். பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு கவுரவ தலைவர்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்ரமணியம், இணை செயலாளர் ரமேஷ், நிர்வாக குழு உறுப்பினர் ரஞ்சித்பாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்