எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சாத்தூர்,
சாத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. முகவர் சங்க சாத்தூர் கிளை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் நிறைபாண்டி, ஊழியர் சங்க செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.ஐ.சி. முகவர்களின் கமிஷன் குறைப்பு நடவடிக்கையை கண்டித்தும், எல்.ஐ.சி. துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த எல்.ஐ.சி. முகவர்கள் கலந்து கொண்டனர்.