எல்.ஐ.சி. முகவர் சங்க பேரவை கூட்டம்

மயிலாடுதுறையில் எல்.ஐ.சி. முகவர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

Update: 2022-07-08 18:43 GMT

மயிலாடுதுறை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் எல்.ஐ.சி. லிகாய் முகவர் சங்க மயிலாடுதுறை கிளையின் (சி.ஐ.டி.யூ. இணைப்பு) பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் ஜெகநாத் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் சண்முகம் வரவேற்றார். இதில் சி.ஐ.டி.யூ.. மாவட்ட துணை தலைவர் ராமானுஜம், சி.ஐ.டி.யூ.. மாவட்ட தலைவர் சீனி.மணி, மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர்.பெண் முகவர்களுக்கு தனி முகவர் அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும். முகவர்களுக்கு குறைந்தபட்சம் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். முகவர்களை அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியத்தில் இணைத்து 60 வயது முடிந்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஐ.ஆர்.டி.ஏ. அறிவித்தபடி முகவர்களுக்கான பாலிசி கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் மாரியப்பன், கிழக்கு கோட்ட செயலாளர் கருணாநிதி, மாநிலக்குழு உறுப்பினர் முனுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்