எல்.ஐ.சி. முகவரிடம் ரூ.71 ஆயிரம் அபேஸ்

எல்.ஐ.சி. முகவரிடம் ரூ.71 ஆயிரம் அபேஸ்

Update: 2022-09-15 17:31 GMT

திங்கள்சந்தை, 

வில்லுக்குறி அருகே தினவிளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 68). எல்.ஐ.சி. முகவரான இவர் அரசியல் கட்சி நிகழ்ச்சியின் கூட்டத்தை காண வில்லுக்குறி சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலுக்கிடையே அவர் அந்த நிகழ்ச்சியை பார்த்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்ட போது பேன்ட் பாக்கெட் கிழிக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த ரூ.71 ஆயிரத்தையும் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்மநபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்