நூலக வாசகர் வட்ட கூட்டம்

தேனி அருகே பூதிப்புரம் கிளை நூலகத்தில், நூலக வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-07-06 18:45 GMT

தேனி அருகே பூதிப்புரம் கிளை நூலகத்தில், நூலக வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வாசகர் வட்ட தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். ஆலோசகர் விடியல்வீரா, ஒருங்கிணைப்பாளர் கவிக்கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பெரியசாமி வரவேற்றார். கூட்டத்தில், நூலக கட்டிடத்தை சுற்றி கம்பிவேலி அமைப்பது, நூலகத்துக்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளை நூலகத்துக்கு வரவழைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்