விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
திருமங்கலம்
கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு சமூகத்தினரிடம் மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆற்றலரசு, துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.