விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
அரியலூரில் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமை தாங்கினார். மாநில முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் கண்டனம் தெரிவித்து பேசினார். அந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.ைய அவதூறாக பேசிய தடா பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பெரியசாமி பேசிய வார்த்தைகளை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், அவருக்கு துணை போகும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில பொறுப்பாளர் அன்பானந்தம், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் கருப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.