விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-01-19 21:11 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவை கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஈரோடு கரூர்ரோடு பரிசல்துறை நால்ரோடு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் அம்ஜத்கான் தலைமை தாங்கினார். கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் வளவன் வாசுதேவன், மாநில துணைச்செயலாளர் எஸ்.எம்.சாதிக், மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர்கள் தங்கவேல், விஜயபாலன், மாவட்ட துணை செயலாளர்கள் பழனிசாமி, அக்பர் அலி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பைஜூல் அகமது, மாவட்ட அமைப்பாளர்கள் பால்ராஜ், ஆனந்தன், கதிரவன், ஜாபர் அலி, பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்