விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்தவர்களை கைது செய்யக்கோரி ஆலங்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சசிகலைவேந்தன், வடக்கு மாவட்ட செயலாளர் பாவாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்தவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையை தடுத்து நிறுத்திடு, தீண்டாமையை கடைபிடிக்கும் சாதி வெறி கும்பலை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.