விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-19 18:45 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகை அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டசெயலாளர் கதிர்நிலவன் தலைமை தாங்கினார். முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த பேசினார்.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் இரட்டை குவளை முறையை ஒழிக்க வேண்டும். குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டம் முடிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்ற போது, தங்களது பெயர்கள் ஆர்ப்பாட்டத்தில் விடுபட்டதாக, ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரிடம் தெரிவித்தனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்