விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை தாங்கினார். பாராளுமன்ற தொகுதி செயலாளர் அரசு பிரபாகரன், மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் அமுதா மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோர் சிலைகளுக்கு காவி சாயம் பூசுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துவளவன், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் எம்.சி.சேகர், தொகுதி துணை செயலாளர் ஜெயக்குமார், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.