விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளுவர், பெரியாரை தொடர்ந்து அம்பேத்கரையும் அவமதிப்பவர்களை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் (வடக்கு) சேரன், (தெற்கு) பாமரன், ஒழுங்கு நடவடிக்கைக்குழு மாநில துணை செயலாளர் வக்கீல் சேரலாதன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அய்யாகரிகாலன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் இரணியன், தனஞ்செழியன், தமிழேந்தி, பிரின்ஸ்சோமு, பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் வள்ளுவன், தொகுதி செயலாளர்கள் தமிழ்மாறன், பால்வண்ணன், செல்வசீமான், பெரியார், திண்டிவனம் நகரமன்ற துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், நகரமன்ற கவுன்சிலர்கள் வித்யாசங்கரி பெரியார், மெரீனா சரவணன், முற்போக்கு மாணவர் கழக அமைப்பாளர் அகத்தியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, மாநில நிர்வாகி பாசறைபாலு, நகர செயலாளர்கள் பாவரசு, இடிமுரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி கலந்துகொண்டு அம்பேத்கர், பெரியார் சிலைக்கு குங்குமம், திருநீறு, காவி உடைஅணிவித்து அவமரியாதை செய்ததை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் மாநில நிர்வாகிகள் பொன்னிவளவன், கூத்தக்குடி பாலு, தொகுதி செயலாளர் மதியழகன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழழகன், இனியன், மாவட்ட நிர்வாகி விடுதலை மணி, மாவட்ட மகளிரணி தலைவி பழனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.