விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணல்மேடு
மணல்மேடு கடைவீதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் டாஸ்மாக் கடை திறப்பது ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மணல்மேடு கடைவீதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டு டாஸ்மாக் கடை திறப்பதை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.