ஆம்புலன்சை மறித்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆம்புலன்சை மறித்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-03-09 18:45 GMT

சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்களையும், பெண்களையும் ஆம்புலன்சில் சிகிச்சைக்கு செல்ல விடாமல் தடுத்து தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கடலூரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், நகர செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயரும், வி.சி.க. கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளருமான தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

இதில் மேற்கு மாவட்ட செயலாளர் துரை.மருதமுத்து, மாநில செயற்குழு உறுப்பினா் பாரா.முரளி, நிர்வாகிகள் திருமேனி, சொக்கு, ஸ்ரீதர், வெங்கடசாமி, கலியபெருமாள், கலைஞர், ஜவகர் சுபாஷ், திருமாறன், பகலவன், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்