விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்

நாசரேத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடந்தது.

Update: 2022-08-28 12:26 GMT

நாசரேத்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் 60 இடங்களில் கொள்கை விளக்க கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நாசரேத் பஸ் நிலையம் அருகில் கொள்கை விளக்க கூட்டம் நடந்தது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிபாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமை தாங்கினார். முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன் வரவேற்று பேசினார். மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் பூலான்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலாளர் தமிழ்க்குட்டி கொள்கை விளக்க உரையாற்றினார்.

இதில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர்கள் செல்வி, அரச்சணா, சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேந்தர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்