ரிஷிவந்தியம் அருகேவிடுதலை சிறுத்தைகள் கொடி கம்பம் அமைப்பு :ஒருதரப்பினர் எதிர்ப்பு தொிவித்ததால் பரபரப்பு

ரிஷிவந்தியம் அருகே விடுதலை சிறுத்தைகள் கொடி கம்பம் அமைத்ததற்க ஒருதரப்பினர் எதிர்ப்பு தொிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-09-23 18:45 GMT


ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அடுத்த முட்டியம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தபள்ளியின் சுவரில் தேச தலைவர்களின் புகைப்படங்கள் வரையப்பட்டுள்ளது. இதில் அம்பேத்கர் படத்தின் மீது கீறல் இருப்பதாக கூறி காலனி தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் முட்டியம் பஸ்நிறுத்தம் அருகே புதிதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடி கம்பத்தை நேற்று நட்டு வைத்தனர். இதற்கு ஊர்ப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த வாணாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார் சேகர் மற்றும் ரிஷிவந்தியம் போலீசார் முட்டியம் கிராமத்திற்கு சென்று இரு தரப்பு மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், அம்பேத்கர் உருவ படத்தில் கீறல் இருப்பது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.

கொடி கம்பம் தொடர்பாக வருகிற 26-ந்தேதி வாணாபுரம் தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பு மக்கள் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடத்தலாம் என வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்று இரு தரப்பு மக்களும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்