விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா

திருவாடானை அருகே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடந்தது.

Update: 2023-06-23 18:45 GMT

தொண்டி,

திருவாடானை அருகே நெய்வயல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றியசெயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் பழனிகுமார் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைசெயலாளர் குமார்வளவன், முகாம் செயலாளர் சுப்பிரமணி ஜெயராஜ், சேவியர், சண்முகம், அர்ச்சுணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தாஸ்ஜோதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்