மின்சாரம் தாக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சாவு

Update: 2023-05-07 19:12 GMT

கெங்கவல்லி:-

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவர் தெடாவூர் பேரூராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய வீட்டில் கழிப்பறை கட்டுமான பணி நடந்தது. இதனால் அருண்குமார், கொத்தனாருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்