விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்

காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-21 18:45 GMT

காட்டுமன்னார்கோவில்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் 2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் எல்.கே. மணவாளன் தலைமை தாங்கினார்.

மாநில விவசாய அணி செயலாளர் பசுமைவளவன், மாவட்ட பொருளாளர் கங்கை முருகன், தொகுதி துணை செயலாளர் வெற்றி வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் நாகராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு, தேர்தல் மண்டல செயலாளர் விடுதலை செழியன், மண்டல செயலாளர்கள் ராஜ்குமார், பரசு முருகையன், அய்யாயிரம் ஆகியோர் கலந்து கொண்டு வருகிற 2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி.யை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் ஜெயக்குமார், அந்தோணிசிங், பிரபு, ராம் சுந்தர், செல்வகுமார், ராமலிங்கம், பகலவன், மயிலப்பன், கஸ்பா, பாலா, ஜெய்சன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்