விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்

நெமிலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-13 17:42 GMT

நெமிலி பஸ் நிலையம் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபா. இளையநிலா தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் வெற்றிவளவன், நெமிலி நகர செயலாளர் அல்போன்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மண்டல செயலாளர் சித்தார்த்தன் கலந்துகொண்டார். கூட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கட்சியின் கிளையை தொடங்க வேண்டும். பெண்களை அதிகமாக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிகமான இடங்களில் வெற்றிபெற அனைவரும் உழைக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நிர்வாகிகள் அன்புக்கரசி பிரபாகரன், மதிவாணன், மாமண்டூர் குணசேகரன், பனப்பாக்கம் லோகநாதன், காவேரிப்பாக்கம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்