விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

புதுப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-27 18:19 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே புதுப்பட்டு பகுதியிலிருந்து புத்திராம்பட்டு செல்லும் சாலையோரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெயர் பலகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பெயர் பலகையை மர்ம நபர்கள் சிலர் சேதபடுத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள புதுப்பட்டு பஸ் நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், எங்கள் கட்சியின் பெயர் பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதனை கேட்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தனர். அதனை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்