விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று நிகழ்ச்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன், மாவட்ட துணைச்செயலாளர் பேரறிவாளன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார்.