ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

Update: 2022-10-13 17:19 GMT

அனுப்பர்பாளையம்

திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் பருவ பயிற்சி திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகள் வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் உள்பட 448 பேர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், ஆசிரியர் கையேடு ஆராய்தல் செயல்பாடு, டி.எல்.எம். தயாரித்தல், மாதிரி வகுப்பறை போன்றவை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கு பாடவாரியாக 8 கருத்தாளர்கள் வீதம் 24 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சியை வழங்கினார்கள். இந்த பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அதிகாரிகள் (இடைநிலை மற்றும் தொடக்கநிலை), மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள். திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அதிகாரிகள், வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இந்த பயிற்சி முகாமை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்