வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடிதம் அனுப்பும் போராட்டம்

Update: 2023-05-26 18:45 GMT

தர்மபுரி:

2023-2024-ம் கல்வி ஆண்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தா.அய்யம்பட்டி கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளருமான வேலுசாமி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் ஏராளமானோர் முதல்-அமைச்சர் மற்றும் ஆணையத்தின் தலைவருக்கு கடிதங்களை அனுப்பினர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சின்னராஜ், ஒன்றிய தலைவர் பூமணி, ஒன்றிய கவுன்சிலர் ராஜாமணி, நிர்வாகிகள் ஆதி, ராஜமாணிக்கம், தவமணி, கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்