நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி பாதை தேர்வு

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் சேலத்தில் நடைப்பயிற்சி நடைபாதையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேர்வு செய்தார்.

Update: 2023-07-10 19:30 GMT

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் சேலத்தில் நடைப்பயிற்சி நடைபாதையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேர்வு செய்தார். அந்த பாதையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு அவர் ஆய்வு செய்தார்.

நடைபாதை தேர்வு

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ் நடைப்பயிற்சி பாதை அமைக்கப்பட உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சேலத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ் நடைப்பயிற்சி மேற்கொள்ள பாதையை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அஸ்தம்பட்டி ரவுண்டானா முதல் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள மாடர்ன் தியேட்டர் வரை 4 கிலோ மீட்டர் தூரமும், பின்னர் அங்கிருந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை 4 கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 8 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைப்பாதையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேர்வு செய்து உறுதிப்படுத்தினார்.

அமைச்சரின் நடைவேகம்

அமைச்சருடன் கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலரும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் அதிகாரிகள் சிலரும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அமைச்சரின் நடை வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்பட்டு நடந்து சென்றதை காணமுடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்