மரம் நடுவோம் மழை பெறுவோம் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

மரம் நடுவோம் மழை பெறுவோம் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2023-05-21 18:52 GMT

தமிழ்நாடு முழுவதும் 40 மாவட்டங்கள் கன்னியாகுமரி முதல் திருவண்ணாமலை வரை பல்லாயிரம் மரக்கன்று, 10 ஆயிரம் விதைகள் நடுவதே என்னுடைய லட்சியம் என சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் ஊராட்சியை சேர்ந்த ஜெயராமன் மகன் வினோத்குமார் என்பவர் கடந்த ஒரு மாத காலமாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி கன்னியாகுமரியில் தொடங்கி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி வழியாக புதுக்கோட்டை சிப்காட் என்ற இடத்திற்கு நேற்று வந்தார். பின்னர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிப்காட் பகுதியில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பிறகு தஞ்சாவூர் நோக்கி அவரது பயணத்தை தொடங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பூங்குடி பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்