'கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கொடநாடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-08 15:48 GMT

சென்னை,

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். உடனடியாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார். பொதுமக்களும் அதை எதிர்பார்த்தனர். அதற்காக தான் ஓ.பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம்' நடத்தினார்.

அதைத் தொடர்ந்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணைக்காக ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அங்கு சென்று சசிகலா மீது தனக்கு சந்தேகம் இல்லை என்று கூறிவிட்டார். முன்னதாக சசிகலா மீது சந்தேகம் உள்ளதாக கூறியவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.

அவர் கொடநாடு வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதற்காக எங்களுடன் வந்து சேரவில்லை. அதனால் தவறான தகவல்களை சொல்ல வேண்டாம். கொடநாடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்துங்கள் என சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக தெரிவித்துள்ளார். கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்