குற்றாலம் அருவிகளில் குறைவான தண்ணீர்

குற்றாலம் அருவிகளில் குறைவான தண்ணீர் விழுகிறது;

Update: 2022-06-29 13:09 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் சீசன் தொடங்கும். இந்த சீசன் 4 மாதங்கள் நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சீசன் இதுவரை தொடங்கவில்லை. கடுமையான வெயில் அடித்ததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.

நேற்று காலையில் இருந்தே குற்றாலம், ஐந்தருவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் குளுமையான சூழல் நிலவுகிறது. ஆனால் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கிறார்கள். இந்த நிலை நீடித்து சாரல் மழை தொடர்ந்து பெய்தால் குற்றாலத்தில் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்