தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மூங்கில்துறைப்பட்டு அருகே தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Update: 2023-01-31 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் தொழுநோய் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதாஸ் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். புதுப்பட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கிராமத்தின் முக்கிய தெரு மற்றும் சங்கராபுரம், சேராப்பட்டு சாலைகள் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து தொழுநோய் குறித்தும், அதை தடுக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் மாணவ-மாணவிகளிடையே ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், தலைமை ஆசிரியர் அன்னக்கிளி, மருத்துவர் சாரதா, மேற்பார்வையாளர் பொன்னுசாமி, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் பிச்சப்பிள்ளை, பெருமாள் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்