தொழுநோய் கணக்கெடுப்பு பணிக்கு 519 குழுக்கள் அமைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 3-ந் தேதி வரை தீவிர தொழுநோய் கணக்கெடுப்பு பணியில் 519 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

Update: 2022-08-09 15:23 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 3-ந் தேதி வரை தீவிர தொழுநோய் கணக்கெடுப்பு பணியில் 519 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் -2022 குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுநோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் பணி வருகிற 16-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 1,010 பேர் ஈடுபடுகின்றனர். 519 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியை கண்காணிக்க 105 பேர் உள்ளனர். அறிகுறி கண்டறியப்பட்டவர்களை பரிசோதனை செய்து, தொழுநோய் பாதிப்பு உறுதி செய்தால், கூட்டு மருந்து சிகிச்சை வழங்க 37 டாக்டர்கள் ஈடுபட உள்ளனர்.

அறிகுறிகள்

தொழுநோய் அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை பொதுமக்கள் அணுகலாம். பொதுமக்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தொழுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். தொழுநோய் 100 சதவீதம் குணமாக்க கூடியது. எம்டிடி எனும் கூட்டு மருந்து சிகிச்சை தொழுநோயை முற்றிலும் குணமாக்கி ஊனமில்லாத வாழ்க்கையை வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்கீதா, நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் புவனேஸ்வரி, துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சுகந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்