சிறுத்தை தாக்கி 3 கன்றுக்குட்டிகள் பலி

சிறுத்தை தாக்கி 3 கன்றுக்குட்டிகள் பலியானது.

Update: 2023-04-01 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே நெலாக்கோட்டை விலங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கி கொன்று வருகிறது. இந்தநிலையில் நெலாக்கோட்டை பஜார் பகுதியை சேர்ந்தவர் சித்திரகனி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது பசுமாடுகள் அருகே உள்ள புல்வெளிக்கு மேய சென்றது. அப்போது 3 கன்றுக்குட்டிகளை சிறுத்தை தாக்கி கொன்றது. இதையடுத்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்காரம் உத்தரவின்படி, பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து கால்நடைத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் ஒரு கன்றுக்குட்டிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் இழப்பீடு தொகையாக சித்திரகனிக்கு வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்