கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதன் வழிப்பாட்டுடன் தொடங்கியது.
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதன் வழிப்பாட்டுடன் தொடங்கியது.
ஈஸ்டர் பண்டிகை
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களும், ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள்.
ஏசுவின் சிலுவைப்பாடுகளால் உலக மக்கள் மீட்பு பெறவும், கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் கடைப்பிடிக்கப்படுகிறது.
சாம்பல் புதன்
இந்த தவக்காலத்தின் போது கிறிஸ்தவர்கள் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள். விரதம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள் தாங்கள் உணவுக்காக செலவு செய்யும் தொகையை சேமித்து அதனை ஈஸ்டர் பண்டிகையின் போது ஏழை மக்களுக்கு வழங்கி மகிழ்வார்கள்.
திருவாரூரில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் நேற்று தொடங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு திருவாரூரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் அருட்தந்தை ஜெரால்டு தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார் சாம்பல் விபூதியிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தார். நகரில் உள்ள கிளை ஆலயங்களிலும் சாம்பல் புதன் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.