சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-23 06:45 GMT

திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன், கைவினை கலைஞர்கள், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி படிக்கும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் கடன்வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு பொது கால கடன், சுய உதவிக்குழு பெண்களுக்கு சிறுகடன், கறவை மாட்டு வாங்க கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்களுக்கான கடன் மேளா திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. திருப்பத்தூர் தாலுகாவில் வருகிற 25-ந் தேதியும், நாட்டறம்பள்ளியில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதியும், வாணியம்பாடி தாலுகாவில் 8-ந் தேதியும், ஆம்பூர் தாலுகாவில் 15-ந் தேதியும் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்