பழனி மார்க்கொட்டில் எலுமிச்சை விலை உயர்வு

பழனி மார்க்கொட்டில் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. அதன் விலை கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-06-03 21:00 GMT

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. மேலும் விவசாயிகள் சிலர் நேரடியாக பழனி உழவர்சந்தையிலும் தங்களது காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுகளில் எலுமிச்சை வரத்து குறைந்து வருகிறது. இதனால் அதன் விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலுமிச்சை ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வரத்து குறைந்ததால் நேற்று எலுமிச்சை கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற்பனையில் ஒரு காய் ரூ.5 முதல் ரூ.7 வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எலுமிச்சை மட்டுமின்றி தற்போது பல காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மல்லிக்கீரை கிலோ ரூ.100-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.70-க்கும், எலுமிச்சை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்